This is a philosophical poem in Tamizh that I wrote based on the basic tenets of Hindu Philosophy.
இது
விடை தேடும் காலம்
வாழ்வின் விடை தேடும் காலம்.
இரை தேடும் பறவை போல
பொருள் தேடி, துணை தேடி
ஓய்ந்து இறை அடித்தேடி
வாழ்வின் பொருள் தேடி
அலையும் காலம்.
இருள் சூழ்ந்த பாதை
பல கண்டு, திசை மாறி, மருண்டு,
பின் சுடர் கண்டு இடறி,
இறை அடி ஒன்றே குறி என்று
விரையும் காலம்.
சிதை கொண்டு போகும் முன்னம்
விடை காண விழையும்
எந்தன் மதி ஏங்கும்
விடியல் இங்கு வாராதோ?
இது
விடை தேடும் காலம்
வாழ்வின் விடை தேடும் காலம்.
இரை தேடும் பறவை போல
பொருள் தேடி, துணை தேடி
ஓய்ந்து இறை அடித்தேடி
வாழ்வின் பொருள் தேடி
அலையும் காலம்.
இருள் சூழ்ந்த பாதை
பல கண்டு, திசை மாறி, மருண்டு,
பின் சுடர் கண்டு இடறி,
இறை அடி ஒன்றே குறி என்று
விரையும் காலம்.
சிதை கொண்டு போகும் முன்னம்
விடை காண விழையும்
எந்தன் மதி ஏங்கும்
விடியல் இங்கு வாராதோ?